மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு

ஜுன் 25ஆம் திகதியன்று நடைபெற்ற யாழ். மாநகர சபை அமர்வில், மாநகர சபை உறுப்பினர் வ.பார்தீபனை நோக்கி ‘நாய்’ என விழித்து பேசிய குற்றச்சாட்டில், மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தை, ஒரு மாத காலத்துக்கு சபை அமர்வில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தடை சட்டமானது, முரணானதெனக் குறிப்பிட்டு, வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்த், மேயருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.