மனோகணேசனால் முடியுமென்றால் கூட்டமைப்பால் ஏன் முடியாது?: முன்னாள் முதலமைச்சர் கேள்வி!!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மனோ கணேசனால் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமலிருக்கின்றது. ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை என இணைந்த வட- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான அ. வரதராஜப் பெருமாள் கேள்வியெழுப்பியுள்ளார்.