மல்லாவியில் துப்பாக்கி சூடு; இளைஞன் காயம்

முல்லைத்தீவு – மல்லாவியில், இன்று (10) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 25 வயது இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை அடையாளங்காணப்படவில்லையெனவும் கூறினர். இதில் காயமடைந்த இளைஞன், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.