மஹிந்தவின் புதிய ஆட்டம்!

மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசியல் விவகாரம் மற்றும் மக்கள் தொடர்புக் காரியாலயம் என்ற போர்வையில் மஹிந்த கட்சி காரியாலயம் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நிகழ்வு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட அனைவரையும் தம்முடன் ஒன்றிணைய வேண்டும் என்று மகிந்தர் அறைகூவல் விடுத்து அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய இந்நிகழ்வில் ஆனந்த தேரர் உட்பட மஹிந்த கம்பனி சகாக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இப்போது மஹிந்த அணி எடுக்கவுள்ள ஆயுதம் இந்த அரசு ராணுவத்தை போர்க் குற்றவாளிகளாக காட்டிக் கொடுக்கவுள்ளது என்று பரப்புரை செய்து ராணுவத்தையும் ராணுவக் குடும்பங்களையும் தன் பக்கம் இழுப்பது. முஸ்லிம் சிங்கள கலவரம் ஒன்றை ஏற்படுத்துவது. நாட்டைக் குழப்புவது நாட்டில் ஒரு கலவரத்தை உருவாக்குவது. அதன் மூலம் அரசுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கி மஹிந்த சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோ வாக வலம்வருவது.