மாணவர்களை சுட்டது தமிழ் பொலிஸ்

கடந்த வெள்ளி அதிகாலை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர்மீது பொலிசாரினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் கிளர்ச்சியியை உண்டுபண்ணியிருக்கும் அதேநேரம் அதனுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் படிப்படியாக கசிந்து வருகின்றது.

யாழ்நகரிலிருந்து தமது விடுதிக்கு இரவு 12.30 மணியளவில் திரும்பிக்கொண்டிருந்த சமயம் வீதியோரப் பொலிசாரால் நிறுத்தப்பட்டும் அதைப் பொருட்படுத்தாது மாணவர்கள் இருவரும் முன்னேறிச் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமுற்ற பொலிசார் முன்னாலிருந்த பொலிசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவர்களை கைது செய்யும் நோக்கில் பின்தொடர்ந்திருக்கின்றனர். ஆனாலும் மாணவர்கள் குடியேபதையில் ஹெல்மட்டையும் போடாமல் மிகவும் வேகமாக சென்றிருக்கின்றனர்.

இதன்போது முன்னாலிருந்த பொலிசாரும் அவர்களை நிறுத்த முற்பட அவர்கள் தொடர்ந்தும் நிற்காமல் செல்ல அதற்கு சிறிது தூரததில் இருந்த பொலிசார் அவர்கள் வாள் வெட்டுக்குழுவென்று நினைத்து சுட்டிருக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளை செலுத்திய சுலக்சனின் இடுப்புப் பகுதியிலும் கையிலும் சூடுபட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவர்கள் அருக்கிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டிருக்கின்றனர். இதன்போது பின்னாலிருந்த கஜனுக்கு தலையில் அடிபட்டு இறந்திருக்கின்றார். அதன்பிறகுதான் பொலிசாருக்கு அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் என்று தெரியவந்திருக்கின்றது. பயந்துபோன பொலிசார் சடலங்களை யாழ்ப்பாண வைத்தியசாலையில் கையளித்து விபத்தின்போது இறந்துவிட்டார்கள் என்று தெரிவித்திருக்கின்றனர். ஆனால் பிரேதப் பிரிசோதனையில் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் இருந்தமையினால் இது கொலை என்று உறுதியாகியது.

இந்த சூட்டுட் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசார் ஐந்துபோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருப்பவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ‘சிங்கம் 2’ என்ற அடைமொழியில் அழைக்கப்படும் சிறி கஜன் எனப்படும் தமிழ் பொலிசாவார். இவர் உதவிப் பொலிஸ் பிரிசோதகராக கடமையாற்றுகின்றார். இவருடன் கூட இருந்த 4 சிங்களப் பொலிசாரும் தற்போது அநுராதபுரம் சிறியில் தடுத்து வைக்கப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பொலிசாருக்கு வீதியில் நிறுத்தாமல் செல்லும் ஒருவரை உயிர் போகுமளவிற்கு சுடுவதற்கு எந்தவித அதிகாரமும் இல்லை அதேபோல் பொலிசார் நிறுத்தினால் நிற்கால் செல்வதற்கு மாணவர்கள் முயற்னமையும் கண்டிக்க வேண்டியது. சுலக்சனின் வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் 1 மாதமாக நிறுத்தப்பட்டிருந்திருக்கிறது. இந்த நிலையிலேயே அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றிருக்கின்றார். ஆக தவறு இரண்டு பக்கமும் இருக்கின்றது. தமிழ்த் தரப்பு அம்மாணவர்களை பிழை இல்லாதவர்களாக காட்டுவதற்கு முயற்சிப்பதை தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதேவேளை பொலிசார் ஒருவரை கொலை செய்யுமளவிற்கு துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டிருப்தை விதி செய்திகள் வன்மையாக கண்டிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் அட்டகாசத்தில் ஈடுபடும் ஆவா குழு நடமாடும் இந்தக் காலப்பகுதியில், குற்றச்செயல்கள் மலிந்துள்ள பூமியில் இரவு 12 மணிக்கு மேல் வீதியில் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் தவறுதான் இன்று அநியாயமாக அவர்களது உயிரைப் பறிக்குமளவிற்கு சென்றுள்ளது. இனியும் பொலிசார் நிறுத்தினால் நிறுத்தவேண்டும் என்ற எண்ணம் ஏனைய இளைஞர்களுக்கும் இதன்மூலம் ஏற்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலும் தீனா குறுப் என்ற ஒன்று வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டபோது அக்குழுவின் சகல உறுப்பினர்களையும் விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு சுட்டுக் கொன்றதை யாழ்ப்பாணத் தமிழர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்பதை விதி செய்திகள் நினைவூட்டுகின்றது.