மாலைதீவுகளின் கோரிக்கைக்கு இந்தியா, சீனா ஒப்புதல்

இதன்மூலம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு, அதாவது நாட்டின் மொத்த இறக்குமதி செலவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை சேமிக்க முடியும் என மாலைதீவுகள் அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில், மாலைதீவுகள் இந்தியாவிடம் இறக்குமதிக்கான பணத்தை இந்திய ரூபாயில் செலுத்த ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது. அதேபோல சீனாவின் வர்த்தக அமைச்சகம் மாலைதீவுகள் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று இறக்குமதிக்கான பணத்தை யுவானில் தர அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, மொத்த இறக்குமதி செலவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை மாலைதீவுகள் சேமிக்க உள்ளது. 

மாலைதீவுகள் இந்தியாவிடமிருந்து ஆண்டுதோறும் 780 மில்லியன் டொலர் மதிப்பிலும், சீனாவிடமிருந்து 720 மில்லியன் டொலர் மதிப்பிலும் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான சர்வதேசளவிலான வர்த்தம் அந்தந்த நாடுகளின் கரன்சிகளில் மேற்கொள்ளப்படும்போது இரு நாடுகளின் அந்நிய செலாவணி இருப்பு மிச்சமாகும். மேலும் இரண்டு நாடுகளுக்கிடையேயான சர்வதேச வர்த்தகத்தை உள்ளூர் நாணயத்தில் மேற்கொள்வதில் வெற்றிகண்டுள்ளது மாலைத்தீவு.

மேலும், இத்தகைய நடவடிக்கை, சர்வதேச வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்காவின் டொலர் சாம்ராஜ்ஜியத்தைச் சரியவைக்கும் எனக் கூறப்படுகிறது