மாவையின் மகன் தேர்தலில் குதிக்கிறார்?

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் களமிறங்கவுள்ளதாக, தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து கல்விக் கற்று வந்த கலையமுதன், தற்போது நாடு திரும்பியுள்ளார். இந்நிலையிலேயே, உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அவர் களமிறங்கவுள்ளதாக, தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.