மினுவங்கொடை பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனம்

கம்பஹா – மினுவங்கொடை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த பி​ரதேசத்திலிருந்து ஏனைய சமூகத்துக்குள் கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டியது அவசியமெனவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.