மியன்மார் ஜனாதிபதியாவதற்கு சூகிக்கு தடை

மியன்­மாரின் ஜனாதிபதியாவதற்கு ஆங் சான் சூகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனா­தி­பதி பெயர் பட்­டி­யலில் சூகியின் முன்னாள் சாரதி ஹ்தின் க்யாவ் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார். ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­கான போட்­டியில் இதுவரை இருவரின் பெயர்கள் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நாடா­ளு­மன்றம் இந்த வாரம் தெரிவு செய்யும். இரா­ணுவத்தின் அரசியமைப்புச் சட்­டத்­தின்­படி, உயர்­ அ­ர­சியல் பொறுப்பு வகிக்க, தேசிய ஜன­நா­யக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்குத் தடை­ விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவரது மகன் பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மியன்மார் இரா­ணு­வத்தால் பல ஆண்­டு­க­ளாக வீட்டுச் சிறையில் வைக்­கப்­பட்­டி­ருந்த அமை­திக்­கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி 2010ஆம் ஆண்டு விடு­தலை செய்­யப்­பட்டார். அதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மியன்­மாரில் நடந்த நாடா­ளு­மன்ற தேர்­தலில் சூகியின் தேசிய ஜன­நா­யக லீக் கட்சி 80 சதவீத வெற்றியைப் பெற்­றது.

இந் நிலையில் அவர் ஜனா­தி­பதியாக முடியாத நிலையில் தனது நம்­பிக்­கைக்கு பாத்­தி­ர­மான ஒரு­வரை சூகி தெரிவு செய்தார். இத­னை­ய­டுத்தே முன்னாள் சாரதி ஹ்தின் க்யாவை ஜனா­தி­பதி பத­விக்கு பரிந்­துரை செய்­துள்ளார் சூகி. 69 வய­தாகும் ஹ்தின் கியாவ் சூகியின் பாடசாலை கால நண்பர் என சொல்லப்படுகிறது. மேலும் அவரது அறக்கட்டளையை நடத்த உதவி செய்து வருபவர்.