‘மீண்டும் ஐ.தே.கட்சியுடன் இணையமாட்டார்கள்’

மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்துக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் மீண்டும் ஐ.தே.கவுடன் இணைந்துக்​கொள்ள மாட்டார்களென முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் இவ்வாறு ​தெரிவிப்பதற்குக் காரணம் குறித்த உறுப்பினர்களை கௌரவிப்பதற்காக என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையெனவும், ஸ்ரீ.ல.சு கட்சியினர் அவ்வாறு செய்யமாட்டார்களென ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அறிவித்துள்ளதாக பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.