மீண்டும் கொழும்பு செல்லும் பிள்ளையான்

தடுப்புக் காவலில் இருந்து நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக இரண்டாவது தடவையாக அனுமதியை பெற்று சென்றுள்ள இவர், வெள்ளிக்கிழமை (25) வரை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட பின்னர் மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துவரப்படுவார் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2005.12.25 திகதியன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக, பிள்ளையான் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நடந்து முடிந்த பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.