மீள்குடியேற்றத்துக்கான பகுதியினாலேயே விழாவில் கலந்துகொண்டேன் – மாவை சேனாதி

தேசிய பொங்கல் விழா இடம்பெற்ற ஆலயம் அமைந்துள்ள பலாலி பகுதி இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களின் இருப்பிடங்கள் என்பதால் இதனை நேரடியாக பிரதமரிடம் எடுத்துக்கூறவே தேசிய பொங்கல் விழா வழிபாட்டில் கலந்துகொண்டேன் என மாவை சேனாதிராசா தெரிவித்தார். 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடங்கள் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனை விடுவிக்க ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நாம் ஏற்கெனவே வலியிறுத்தியுள்ளோம். இந்த நில விடுவிப்புக்காக நாம் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். எனினும், இன்னமும் முழுமையாக விடுவிக்கபடவில்லை. இப்போது தான் பகுதி பகுதியாக விடுவிக்கின்றனர். இவை முழுமையாக விடுவிக்கபடவேண்டும்.

குறிப்பாக இந்த ஆலயம் அமைந்துள்ள இடமும் இன்னமும் விடுவிக்கபடவில்லை. எனவே, இன்றய வருகையை ஒரு அர்த்தமானதாக அமைத்து ஏற்கெனவே எமக்கு அழிக்கபட்ட உறுதி மொழிக்கு அமைவாக இந்த நிலங்கள் விடுவிக்கபடவேண்டும். இதனை நேரில் தெரியபடுத்தவே இப்பகுதியில் இடம்பெறும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டேன். இதனைத் தொடர்ந்து இடம்பெறும் ஏனைய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்றார்.

One thought on “மீள்குடியேற்றத்துக்கான பகுதியினாலேயே விழாவில் கலந்துகொண்டேன் – மாவை சேனாதி”

  1. மாவையார் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் அடுத்த தமிழர் திருநாள் தமிழீழத்தில் தான் கொண்டாடப்படும் என்று ஓர் அறிக்கை வெளியிடுவார்.

Comments are closed.