முக்கிய இடங்களை கைவிட தீர்மானம்

காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றை உரிய தரப்பினரிடம் கையளிக்க காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு நடைபெற்று வரும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.