முக்கிய முடிவுகளை 21 ஆம் திகதி வெளியிடுகிறார் – கமல்ஹாசன்

இந்த நிலையில் வருகிற 21 ஆம் திகதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆவது ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் நடைபெறும் இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

மாநாடு அல்லது பொதுக்கூட்டத்துக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. அதனை எங்கு நடத்துவது? என்பது பற்றி கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.அந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் கொள்கைகளை அவர் வெளியிட உள்ளார்.