முதலில் கரோனாவைச் சமாளிப்போம்… நிதிப் பற்றாக்குறையைப் பிறகு சரிசெய்துகொள்ளலாம்!

கரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு அதனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%, இங்கிலாந்து அரசு 12.5% ஒதுக்கியுள்ளன. இந்தியாவில் மத்திய அரசு, முதற்கட்டமாக கரோனா தடுப்பு உபகரணங்களுக்காக ஒதுக்கிய ரூ.15,000 கோடியையும், நிவாரணத்துக்காக ஒதுக்கிய ரூ.1.75 லட்சம் கோடியையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சில வட்டிக்குறைப்புகளையும் சேர்த்தால், நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 2-3%-க்குள்தான் வருகிறது. 135 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவுக்கு இந்த நிதி ஒதுக்கீடு போதவே போதாது.