முன்னாள் எம்.பி சூசைதாசன் காலமானார்

மன்னார் தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பி.எஸ். சூசைதாசன் சோசை, தனது 83ஆவது வயதில் நேற்று (13) மாலை காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டம் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ். சூசைதாசன் சோசை தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மன்னார் தொகுதியில் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 15,141 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.