மெளனமாக அசைவுறும் நில அபகரிப்பு

புத்தள மாவட்டத்தின் வடக்கு பிரதேசம் தொன்மையான வரலாற்றுத்தடங்களை நிறைத்துள்ள பகுதியாகும் வில்பத்துவனம் விலங்குகளுக்கான வாழ்விடம் என்பதற்கு அப்பால் வரலாற்றின் சாட்சிகளை புதைக்கும் கானகமாகவும் உள்ளது.உ+ம் வில்பத்துவனத்தின் கடல்கரையோரமாகவுள்ள பூக்குளம் தொன்மைமிக்க தமிழ்க்கிராமமாகும் இன்று அதற்கான அடையாளம் எதுவுமில்லை.

சிங்கள மீன்பிடிக்கிராமமாகும்.இலவங்குளம் மயிலங்குளம் வண்ணாத்திவில் இவைகள் செழிப்பான செம்பாட்டுமண்வளமுள்ள ஊர்கள் சுதந்திரத்திற்கு பின் திட்டமிட்ட பெரும்பான்மையினத்தவருகான விவசாய குடியேற்றங்களாக மாற்றப்பட்டது.அப்போது குரல் எழுப்ப வலுவில்லை வழியுமில்லை சேவகம் செய்யும் அரசியல்மட்டுமிருந்தது. புத்தளம் வாழ் தமிழர்களுக்கு நிலம் தொடர்பான எந்த கரிசனையுமில்லை.
இப்போது பாரியளவில் மீண்டும் நன்கு திட்டமிட்ட அபிவிருத்தி வேலையாக வண்ணாத்திவில்லில் வீடமைப்புத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் முஸ்லீம் தமிழ் மக்களுக்கும் இடமுள்ளதா?தெரியவில்லை.

(Ma Nagarajah)