‘மோடிக்கு நேரமில்லை’

ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர ​மோடி, ஒப்பந்தம் எதிலும் கைச்சாத்திட மாட்டார். அதற்கு அவருக்கு நேரமும் இல்லை” என, அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “ இலங்கைக்கு வரும் மோடி, கொழும்பில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்வதுடன் ஹட்டன், டிக்கோயாவில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலையை திறந்துவைப்பார்.

அதனையடுத்து மதிய உணவின் பின்னர், அவர் இந்தியா நோக்கிச் சென்றுவிடுவார். இடையில் எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படமாட்டாது. அதற்கு அவருக்கு நேரமும் இருக்காது” என்றார்.

“இலங்கைக்கு விஜயம் செய்யும் மோடி, திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொடர்பான ஒப்பந்தத்தில் ​மோடி கைச்சாத்திடுவாரா”? என, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

– See more at: http://www.tamilmirror.lk/195519#sthash.VveZrp0g.dpuf