யாழில் ஷவேந்திர சில்வா

யாழில், 92 சதவீதமான பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அத்துடன், எஞ்சியுள்ள 8 சதவீதமான காணிகளில், விமான நிலைய பயன்பாடு தவிர்ந்த ஏனைய காணிகள் அனைத்தையும் பொதுமக்களிடம் கையளிக்கப்படும் எனவும், இராணுவதளபதி தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி நல்லூர் கோவில் முன்றலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.