யாழ்ப்பாணத்தில்: வெகுஜன அமைப்புகள் அரசியல் கட்சிகளின் கருத்தரங்கு

ஆட்சி மாற்றம் நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நேற்றைய (08.01.2017) தினம் 2017 இன் அரசியல் சாத்தியங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று யாழ் வைஎம்சிஏ மண்டபத்தில் நடைபெற்றது. சமூக – அரசியல் செயற்பாட்டாளர்கள் அரங்கம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், வெகுஜன அமைப்புக்களை சார்ந்தவர்கள், சமூக அக்கறையுள்ள தனி நபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தி. ஸ்ரீதரன் (சுகு) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சமூக பொருளாதார ஆய்வாளர் ஏ.சி.ஜோர்ச், அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா, சமூக இலக்கிய செயற்பாட்டாளர் சி.கருணாகரன் ஆகியோர் 2017 இன் அரசியல் சாத்தியங்கள் குறித்துக் கருத்துரைகளை வழங்கினர்.

இதனை தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா, சட்டத்தரணி சிவகுருநாதன், கிராமிய உழைப்பாளர் அபிவிருத்தி மையத்தை சேர்ந்த சசி தங்கராஜா, பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் ஊடகவியலாளர் ஜெயச்சந்திரன், ஈ.பி.டி.பி தேசிய அமைப்பாளர் கிரு~;ணபிள்ளை, முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள்உட்பட பலர் மேற்படி விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.