யாழ் சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் திறக்க முயற்சி

யாழ் சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் திறப்பதற்கான முக்கியப் பேச்சுவார்த்தை ஒன்று, யாழ் பழைய பூங்காவில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 53 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் நகரப் பகுதியில் அமைக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயமானது, 1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளால் மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது அதனை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, யாழ் பழைய பூங்காவில் குறித்த பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் உள்ளிட்ட பலரும் நேற்று கூடி, இது தொடர்பில் கலந்துரையாடியிருப்பதாக தெரியவந்துள்ளது. எனினும் தற்போது இராணுவத்தினரின், ஆக்கிரமிப்பிலேயே யாழ் சிங்கள மகா வித்தியாலயம் இருக்கின்றது.