யாழ். மாநகர சபையின் பட்ஜெட் தோல்வி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் விசேட அமர்வு, மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று (02) நடைபெற்றது. இதன்போது, நிதியறிக்கை்கான வாக்கெடுப்பின் போது, ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன நிதியறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.