“யுனெஸ்கோவில்” இருந்து அமெரிக்கா, இஸ்ரேல் விலக தீர்மானம்

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அ​மெரிக்கா விலகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்தே இவ்வாறு விலக தீர்மானித்துள்ளது. அடுத்த வருடம் ( 2018) டிசம்பர் இறுதியில் யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் எனவும், அதுவரை அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறியுள்ளது. யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததையடுத்து இஸ்ரேலும் விலகப் போவதாக அறிவித்துள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து யுனெஸ்கோ கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.