யோசித ஆதரவு கடற்படையினர் இடைநிறுத்தம்!

யோசித ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கையில் பட்டி அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணி வீரர்கள் நால்வரை சிறிலங்கா கடற்படை இடைநிறுத்தியுள்ளது. டியகமவில் நேற்று நடந்த ரக்பி போட்டியில் விளையாடிய சிறிலங்கா கடற்படை அணியின் வீரர்கள் நால்வர், தமது அணியின் முன்னாள் அணித் தலைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவருமான, யோசித ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கையில் பட்டிகளை அணிந்திருந்தனர். யோசித ராஜபக்சவின் இலக்கமான 07 என்பதை, YO07 என அவர்கள் தமது கைப்பட்டிகளில் எழுதியிருந்தனர். இதையடுத்து, சிறிலங்கா கடற்படை அணியின் நான்கு வீரர்களும் விசாரணை முடியும் வரை சிறிலங்கா கடற்படைத் தளபதியால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.