யோசித ராஜபக்ஸ 24ம் திகதி வரை விளக்க மறியலில்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் மற்றும் நிதிச் சலவை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யோசித ராஜபக்ஸ, நிசாந்த ரணதுங்க ரொஹான் வெலிட்ட உள்ளிட்ட ஐந்து பேரை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட யோசித உள்ளிட்டவர்கள் தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹோமாகம நீதவான் நீதிமன்றிற்கு இன்று அழைத்து வரப்பட்ட போது இவர்களின் விளக்க மறியல் காலத்தை நீதவான் தம்மிக்க ஹேமபால நீடிக்கப்பட்டுள்ளார். பிணையில் விடுதலை செய்யுமாறு யோசித ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு தொடர்பில் எதிர்வரும் 14ம் திகதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.