ரயில் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக   ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.