ராஜபக்ஷவுடன் மனம் கசந்து தனிவழி செல்கிறார் விமல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக நியமிக்கவேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து ராஜபக்ஷர்களுக்கு இடையிலும் அரசாங்கத்துக்குள்ளும் பொதுஜன பெரமுனவுக்குள்ளும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷவுடன் மனம் கசந்து தனிவழி செல்கிறார் விமல்

Editorial / 2021 மார்ச் 22 , பி.ப. 12:18 – 0 – 301
AddThis Sharing Buttons
Share to Facebook
FacebookShare to TwitterTwitterShare to WhatsApp
WhatsApp

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச அதிரடியான அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

அவரது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு தீர்மானத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் முன்னணியின் அரசியல் சபைக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.