வடக்கு முதல்வரின் கிழக்கு விஜயம்?

வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவருமான நீதியரசர் சீ.வி. விக்கினேஸ்வரன் எதிர்வரும் வாரத்தில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சீ.வி. விக்கினேஸ்வரன் மட்டக்களப்புப்பு வருகை தரவுள்ளார். கடந்த மாதத்தில் தமிழ் மக்கள் பேரவையின் புதிய அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கலந்துரையாடலுக்கு விக்னேஸ்வரன் வருகை தருவார் என்ற எதிர்பார்ப்பு அன்றைய தினம் மக்களுக்கு நிறைவேறாது போனது அந்த வகையில் எதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வடமாகாகண முதலமைச்சர் வருகை தருவார் என்று தெரிகிறது.