வடமாகாண மக்களின் தீராத வலிகளை ஆற்றுப்படுத்துவேன்

வடக்கு மாகாண மக்களிடம், தீராத வலிகள் இருப்பதாகவும் அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவைகள் பல இருப்பதாகவும் அதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கோரியதாகவும், அவரது கோரிக்கைக்கமைய, வலிகளைச் சுமந்த வடக்கு மாகாண மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.