”வட கொரிய அதிபரைச் சந்திப்பது எனக்கு கௌரவமானது!” ட்ரம்ப் அடித்த அந்தர் பல்டி!

(எஸ். ஹமீத்)

நேற்று திங்கள்கிழமையன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க ஜனாதிபதி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.அதில், ”வட கொரிய அதிபர் கிம்-ஜோங் உன் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் சரியாக இருந்தால், நிச்சயமாக நான் அவரைச் சந்திப்பேன். அதனை நான் எனக்கான கௌரவமாகவும் எடுத்துக் கொள்வேன்.” என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கடந்த ஞாயிற்றுக்கிழமை ”முடிவெடுப்பதில் கிம் ஜோங் உன் ஒரு மிடுக்கான நபர்!” என்றும் வடகொரியா அதிபரை டிரம்ப் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் பல்டி அடிப்பதில் கில்லாடிதான். ஆனால், இப்படி அந்தர் பல்டியை இவ்வளவு விரைவாக அடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏதோ, நடப்பது நல்லதாக நடந்து இந்த உலகம் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டால் அது எல்லோருக்கும் நல்லதுதான்!