வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவ முன்வருவோம்!!!

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட எமது பகுதி மக்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்… எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் முடியுமான அளவு பொருட்களை சேகரித்து வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் சென்று கையளிக்க சமூகத்தில் அக்கறையுள்ள இளைஞர்கள் ஊடாகவும், சமூக ஆர்வலர்கள் ஊடாகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். ஆகவே தங்களால் முடிந்த உதவிகளை வெளிநாடுகளில் வசிக்கும் எமது நண்பர்கள், இப்பகுதி தனவந்தகர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், ஆலய பரிபாலன சபையினர்கள் கைகோர்த்து உங்களால் முடிந்த பணத்தினையோ, பொருட்களையோ தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.. நீங்கள் தரும் உதவித்தொகைக்கு கொள்வனவு செய்யப்படும் பற்றுச்சீட்டுக்கள் அடங்கிய கணக்கறிக்கைகள் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதுடன் எங்கள் சேவை ஒரு வெளிப்படை மிக்கதாகவும், எந்தவித உள்நோக்கமும் இன்றி பாதிக்கப்பட்டவர்களின் கரங்களுக்கு செல்லும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.. தொடர்புகளுக்கு – 0777389113 Please முடியுமானவரை செயார் செய்து ஏனைவர்களுக்கும் தெரியப்படுத்தவும்..