வாபஸ் பெறுவதற்கான படிமுறைகள் ஆரம்பித்தன

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவதின் திட்டமிடப்பட்டதன் அங்கமொன்றாக உள்ளூர் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக, ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டு இராணுவப் படைகளின் தளபதியான, ஐக்கிய அமெரிக்க இராணுவ ஜெனரல் ஸ்கொட் மில்லர் நேற்று தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் படைகளிடம் படிப்படியாக வெளிநாட்டு இராணுவத் தளங்கள் கையளிக்கப்படுமென மில்லர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு தங்களது அனைத்துப் படைகளும் தயாராவதாகவும், உத்தியோகபூர்வமான குறிப்பிட்ட திகதி மே மாதம் முதலாம் திகதி என மில்லர் தெரிவித்துள்ளார்.