விக்னேஸ்வரனுடன் விரைவில் இணைவேன்! – கருணா

விரைவில் விக்கியுடன் பேசி பேரவையில் இணைவேன் அதன் நோக்கங்கள் சிறந்தவை என்கிறார் கருணா. தமிழ் மக்கள் பேர­வையின் நோக்­கங்கள் சிறந்­த­தாக இருப்­ப­தனால், வட­மா­காண முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலை­வ­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ரனை விரைவில் சந்­தித்துப் பேச்­சு­வார்­த்தை நடத்தி அப்­பே­ர­வையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைந்து செயற்­ப­ட­வுள்ளேன் என முன்னாள் பிர­தி­ய­­மைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா) தெரி­வித்தார்.

புதி­தாகத் தோற்­று­விக்­கப்­பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கேட்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிடு­கையில், யுத்­தத்தின் பின்னர் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை முறை­யாக கையாள்­வ­தற்கு சகல தமிழ் மக்­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அமைப் ­பொன்­றுக்­கான தேவை இருந்து வந்­தது. அந்தத் தேவைப்­பாடு இப்­போது தமிழ் மக்கள் பேர­வை­யாக வெளிக்­கொ­ண­ரப்­பட்­டுள்­ளது. யுத்­தத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பு தமிழ் மக்­க­ளுக்கு உரிய தலை­மைத்­து­வத்தை வழங்கத் தவ­றி­விட்­டது. அக்­கட்சி தற்­போது உறு­தி­யற்ற நிலையில் தனது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கி­றது.

அக்­கட்­சிக்குள் ஒரு­மித்த கருத்தை காண­மு­டி­யா­துள்­ளது. மேலும் போர்க்­குற்ற விசா­ரணை தொடர்பில் உள்­நாட்டில் ஒரு கருத்­தையும் வெளி­நா­டு­களில் மற்­று­மொரு கருத்­தையும் வெளிக்­காட்­டி­யது. அத்­துடன் அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சி­யாக இருந்து அர­சாங்­கத்தின் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப செயற்­ப­டு­வ­தனால் எதிர்­கா­லத்தில் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுக்க முடி­யாத நிலை ஏற்­படும். எனவே, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முறை­யாகக் கையாளத் தவ­றி­ய­மை­யி­னா­லேயே தமிழ் மக்கள் பேரவை தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் குர­லாக தமிழ் மக்கள் பேரவை திகழும் என்­கின்ற நம்­பிக்கை எனக்­குள்­ளது. தமிழ் மக்கள் பேர­வையின் நோக்­கங்கள் சிறந்­த­தாக இருப்­ப­தனால், விரைவில் வட­மா­காண முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலை­வ­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ரனை சந்­தித்துப் பேச்­சு­வார்­ததை நடத்தி அப்­பே­ர­வையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைந்துது செ­யற்­ப­ட­வுள்ளேன். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த சிலர் விமர்­சிப்­பது போல் இப்­பே­ர­வை­யினால் தமிழ் மக்­க­ளுக்கு பாதகத்தன்மை ஏதும் இல்லை.

மாறாக மக்­களின் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான உபா­ய­மா­கவே இதனை நோக்க வேண்­டி­யுள்­ளது. குறித்த அமைப்பில் அங்கம் வகிப்­ப­வர்­களில் ஏரா­ள­மானோர் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்கள் என்றும் சிலர் விமர்­சிக்­கின்­றனர். எனினும், தேர்­தல்­களில் தோல்­வி­ய­டைந்­த­வர்கள் இனி­வரும் தேர்­தல்­களில் வெற்­றி­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. அது மாத்­தி­ர­மல்­லாமல், தேர்­தலில் வெற்­றி­ பெற்­றுள்ள பலரும் விரைவில் தமிழ் மக்கள் பேர­வையில் இணைந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எம்.பி.க்கள் சிலர் பல முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் அழுத்தத்தின் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவங்களையும் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.