விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது

2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இந்தியாவின் குடியரசுத் தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அதில் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் டில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இந்தியாவின் குடியரசுத் தலைவரிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டார்.