விடுதலைப் புலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீட்டிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை நிகழ்ந்த பிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இந்திய மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்து, தொடர்ந்து அதை நீட்டித்து வருகிறது.