விதிமுறைகளை தளர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள விதிமுறைகளை தளர்த்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று கொழும்பு கோட்டையில் நடைபெற்ற கைத்தொழில் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தி,  அந்நிய செலாவணியை விரைவாக ஈட்ட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.