விமானத்தில் ஏற முடியாத நிலையில் கோட்டா

ஜனாதிபதி சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும், அதன் பின்னர் அவர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காரணங்களால் ஜனாதிபதியால் விமானத்தில் ஏற முடியவில்லை எனவும், சிங்கப்பூர் செல்வதற்காக தனியார் விமானம் ஒன்றுக்காக ஜனாதிபதி காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.