விமான சேவை 6இல் வழமைக்கு திரும்பும்

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள், வழமைபோல எதிர்வரும் 6ஆம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், தற்போது இறுதிக் கட்டத்தை எய்தியுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான கட்டுமானப் பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. விமான ஓடு பாதையின் பணிகளும் நவீன தொழில்நுட்ப ரீதியான சமிக்ஞைக் கட்டமைப்பும், தற்போது பொருத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திட்டமிட்டதன் அடிப்படையில், எதிர்வரும் 5ஆம் திகதி, விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் எனவும், மறுதினமான 6ஆம் திகதியில் இருந்து விமான சேவைகள் வழமைபோல இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் அங்கு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 7.2 பில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.