விலை போனார் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரீஸ்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச். எம். எம். ஹரீஸ் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள் இணைப்புக்கு உதவி, ஒத்தாசை வழங்குவார் என்று புலம்பெயர் தமிழ் சமூக பிரதிநிதிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான தமிழ் பிரபலம் ஒருவர் இவ்விடயத்தில் இடை தரகராக செயற்பட்டு உள்ளார்.

பிரதி அமைச்சர் ஹரீஸுக்கு பிரதி உபகாரமாக புலம்பெயர் தமிழ் சமூக பிரதிநிதிகளால் பல கோடி ரூபாய் ரொக்க பணம் பரிமாறப்பட்டு உள்ளது. அத்துடன் லண்டன் போன்ற மாநகரங்களில் உள்ள இரவு விடுதிகளில் உல்லாச களியாட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு உற்சாக மது பானமும் வழங்கப்பட்டு உள்ளார்.

இது சம்பந்தப்பட்ட விடயங்கள் மு. கா தலைவர் ரவூப் ஹக்கீம் அடங்கலாக கட்சி முக்கியஸ்தர்கள் பலருக்கும் தெரிய வந்து உள்ளன. இந்நிலையில் இவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவரை சில முக்கியஸ்தர்கள் நெருக்கி உள்ளனர். இதே நேரம் கிழக்கில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்து வருகின்ற நிலையில் ஹரீஸ் எதிர்கால தேர்தலை இலக்கு வைத்து கட்சி தாவல் மேற்கொள்ளலாம் என்கிற நியாயமான அச்சமும் தலைவருக்கு உள்ளது.

இந்நிலையில் நாளை மறுதினம் இடம்பெற உள்ள கட்சி பேராளர்களின் விசேட கூட்டத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸுக்கு எதிராக குற்ற பத்திரங்கள் வாசிக்கப்படலாம் என்று அரசியல் அவதானிகள் எதிர்பார்க்கின்றனர்.