வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு

அரசியல் பழிவாங்கல்களால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பல்நாடு பிராந்தியத்தில் பாரிய ஒன்றுகூடல்கள் பொலிஸாரால் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வீட்டிலிருந்து கருத்துத் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, “இது ஜனநாயகத்துக்கு கறுப்பு தினம்” எனக் கூறியதுடன் பொலிஸாரின் நடவடிக்கையானது அட்டூழியமாகவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருப்பதாகவும், அரசாங்கமானது மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகவும், அரசாங்கத்துக்கு தான் எச்சரிப்பதாகவும், பொலிஸாருக்கும் தான் எச்சரிப்பதாகவும், தங்களைக் கைது செய்வதால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

நேற்றுக் காலை 8.30 மணியிலிருந்து இன்றிரவு 8 மணி வரை உண்ணாவிரதத்தில் சந்திரபாபு நாயுடு இருந்த நிலையில், தேவினேனி அவினாஷ், கெஸினேனி நனி, பூமா அஹில்பிரியா போன்ற தெலுங்கு தேசக் கட்சித் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்திரபாபு நாயுடுவின் கார் வீட்டு வாயிலை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பதாக சந்திரபாயு நாயுடுவின் வீட்டுக்கு வெளியேயிருந்த வீதியை பொலிஸார் மறுத்திருந்தனர். பொலிஸாருக்கெதிராக அவரது ஆதரவாளர்கள் கோஷமெழுப்பிய நிலையில் அரை மணித்தியாலமாக காரில் இருந்திருந்த சந்திரபாபு நாயுடு, தனது வீட்டுக் காவல் முடிந்ததும் அத்மகூருக்குச் செல்வதாகத் தெரிவித்திருந்தார்.

ஆளும் வை.எஸ்.ஆர் காங்கிரங்ஸ் கட்சியின் அச்சுறுத்தல் என்று கூறப்படுவதற்க்கெதிராக தெலுங்கு தேசக் கட்சி ஆர்ப்பாட்டமொன்றைத் திட்டமிட்டிருந்தது.