வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக-கேரள எல்லைகளில் வேளாண் களப்பணியாளர்கள் கண்காணிப்பு

தமிழக விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இல்லையென்ற போதிலும், அவற்றிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் வெட்டுக் கிளிகள் தென்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இப்பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வட்டார வேளாண்மை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.