‘வெப்பமே உயிரிழப்புக்கு காரணம்’

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தாலேயே, நந்திக்கடல் பகுதியில், மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், இன்று (12) தெரிவித்தார். முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில், நேற்று (11) பெருமளவான மீன்கள் உயிரிந்த நிலையில் கரையோதுங்கியுள்ளன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. இது தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், கடந்த வருடமும், அதிக வெப்பநிலை காரணமாக இதேபோன்று, மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியதாகத் தெரிவித்தார்.