ஷொங்சிங் விமான நிறுவனம் இலங்கைக்கான முதலாவது சேவையை ஆர​ம்பித்துள்ளது

சீனாவின் ஷொங்சிங் விமான சேவையைானது ஷொங்சிங் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேர​டி விமானசேவையை நேற்று முன்தினம் (28) ஆரம்பித்துள்ளது. சீனாவின் ஷொங்சிங் விமான நிலையத்திலிருந்து முதன் முதலாக பயணத்தை ஆரம்பித்த ஓ.கியு. 2393 என்ற விமானம் நேற்று முன்தினம் 9.10 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த இந்த விமானத்தில் 152 பயணிகளும் 11 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர். குறித்த விமானம் வாரத்தில் திங்கள், புதன், வௌ்ளி ஆகிய நாள்களில் இரவு 9.10 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடையும் என்பதுடன், குறித்த தினமே இரவு 10.10 மணியளவில் இவ் விமானம் சீனாவை நோக்கி புறப்படவுள்ளது.