ஸஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புடையவர் இந்தியாவில் கைது

இந்தியா – கேரளா மாநிலத்தில் தற்கொலை தாக்குதல்தாரியொருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர், இலங்கையில் கடந்த நாளில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவரான, ஸஹ்ரான் ஷமீம் உடன் நெருங்கிய தொடர்புடையவரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ரியாஸ் அபூபக்கர் எனப்படும் 29 வயதுடையவராவார். அத்துடன் கேரளாவில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுமா, என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.