ஸ்காபரோவில் தமிழர் மரபுப்படி தேர்தல் திருவிழா

கனடா ஸ்காபரோ ரூஜ் ரிவர் பகுதி முன்னாள் ரொறொண்டோ கல்விச்சபை உ றுப்பினர் சூன் சான் நம் இராதிகாவை வென்று பாராளுமன்றம் சென்றபடியால் கல்விச்சபை அறங்காவலர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். எனவே அங்கு ஒரு இடைதேர்தல் எதிர்வரும் திங்கள் 25.01.06அன்று நடை பெற இருக்கின்றது.

அங்கு 20 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர். அதன் நிமித்தம் சர்வ வேட்பாளர் விவாதமொன்று கடந்த 19 அன்று எஜின்கோர்ட் சமூக மையத்தில் நடைபெற்றது. போட்டியிடும் 3 தமிழ் வேட்பாளர்களில் ஒருவரான நீதன் சண் மீது பலத்த கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டது. நீங்கள் ஏன் பல தேர்தல்களில் போட்டியிட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள், யோர்க் கல்விச் சபையில் இருந்த போது உருப்படியாக என்ன செய்தீர்கள், டொரோண்டோ கல்விச்சபையை சீர்குலைக்கும் தொழிற் சங்க சார்பு அறங்காவலர்களுக்கு உதவப் போகின்றீர்களா, என்.டி.பி கட்சி ஆதரிக்கும் ஒருபால் கல்வி போதனையை ஆதரிகின்றீர்களா எனக்கேட்டு திக்குமுக்காட வைத்துவிட்டனர். 2014ல் போட்டியிட்ட பிரவீனா சத்தியானந்தம் வரவில்லை. சென்ற முறை மேயர், கவுன் சிலர் என ஒன்றாக தேர்தல் நடந்த பொது கவுன்சிலராக போட்டியிட்ட சிவவதனி பிரபாஹரனுடன் கூட்டாகி ஓரளவு வாக்குக்களை பெற்று இருந்த போதிலும் இம்முறை அவரை தொடர்பு கொள்ள முடியாது உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள் . இன்னொரு வேட்பாளரான குகா காசிலிங்கத்தின் கருத்துக்களுக்கு பலத்த வரவேற்பு இருந்ததுடன் ஏனைய வேட்பாளர்கள் பலரும் அவருக்கு இறுதியில் வாழ்த்து தெரிவித்ததை காணக் கூடியதாக இருந்தது.

சீன இனத்தவர்கள் 6 பேர் போட்டியிட்ட போதும் ஜாக் வாங் , சொன்னி யுவான்க் இடையே பலத்த போட்டி நிலவுகின்றது. ஆயினும் வட்டாரத்தின் கிழக்குப் பாகத்தில் இருக்கும் தமிழர்கள் கொள்கைகளை படிக்காது மந்தைகள் போல் முற்கூட்டிய வாக்குப் பதிவின் போது வந்ததாக பலரும் குறைப் பட்டுக் கொண்டனர். இளம் யுவதிகள் தொண்டு மணித்தியால சான்றிதலைப் பெறுவதற்காகவும் ஐந்து ப த்து கைச்செலவுக்காகவும் வயோதிபர்களை தகுந்த அறிவூட்டல் செய்யாது கூட்டாக அழைத்து வந்து வாக்களிக்க வைப்பதாகவும் வேறிடங்களில் இருப்போர் திடீரென இங்கு பதிவாகி வாக்களிக்க முனைவதாகவும் கவலைப் பட்டனர். அவ்வாறு பதிய முற்பட்ட ஒரு யுவதி கொடுத்த சாரதிப் பத்திரத்தில் ஏஜாக்ஸ் விலாசம் இருந்ததால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இன்னொரு கீ.. பேர்கொண்ட யுவதியின் வாக்கு காலையில் வாக்காளர் அட்டை இல்லாது பதிந்து வாக்களிக்கப்பட்டு மாலையில் வாக்காளர் அட்டையுடன் வந்த பொது அவர் ஏற்கனவே வாக்களித்து விட்டதாக கணணி சுட்டிக் காட்டியது. அனினும் அவர் உறுதி மொழியில் கையெழுத்து இட்டு வாக்களிக்க அனுமதிக்கப் பட்ட போதிலும் தேர்தலுக்கு பின்னர் விரிவான ஆராய்வு நடத்தப்படுமெனவும் தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு பலத்த தண்டனை உண்டு எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. எம் யுவதிகள் தம் வாழ்க்கையையும் ஏனைய மாணவர் எதிர்காலத்தையும் இவ்வாறு வீணடிக்கக் கூடாது என்று அந்த சீன இனத்தவர் கூறினார்.

பலமுறை தேர்தலில் போட்டியிட்டோர் அந்த அறிவிக்கைப் பலகைகளை வெட்டி ஒட்டி மீள் சுழற்சி செய்வதை காண முடிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், கவுன்சிலர் தேர்தல்களுக்கு நன்கொடை அளிப்போருக்கு ஒரு பகுதி மீளக் கிடைக்கும் வாய்ப்பு உள்ள போதிலும் கல்விச்சபை தேர்தல் நன்கொடைகளுக்கு அவ்வாறு ஒன்றும் கிடைக்காது என்பது குறிப்பிடத் தக்கது.