ஸ்ரீ லங்கன் விமானத்தில் விமானப்படை அதிகாரி

ஸ்ரீ லங்கன் விமானச் சேவையின், தெரிவு செய்யப்பட்ட சில விமானப் பயணங்களுக்காக, விமானப் படை அதிகாரியொருவரை எதிர்வரும் காலங்களில் இணைப்பதற்குத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேற்படி விமானச் சேவையின் பிர​தான நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக்க, எதிர்வரும் நாள்களில், ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானங்களின் பணியாளர்கள் குழுவில், விமானப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளடக்கப்படுவர் என்றும் கூறினார். கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா விமான நிலையத்தில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.