ஹட்டனில் ஈரோஸின் மே தினக் கூட்டம்

“உலக பாட்டாளிகளே உரிமை மீட்புக்காக ஒன்றுபடுங்கள்” எனும் தொனிப் பொருளில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மே தினக் கூட்டம் ஹட்டன் – டிக்கோயா புவியாவத்தை நகரில் மே 1ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு காலை 9.00 மணிக்கு கட்சியின் மலையகப் பொறுப்பாளர் தோழர் இரா. ஜீவன் இராஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதில் பிரதமஅதிதியாக, கட்சியின் செயலாளர் நாயகம் இரா.ஸ்ரீ. இராஜேந்திரா, சிறப்பு அதிதியாக கட்சியின் தலைவர் கு. சௌந்தராஜன், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாகாண சபை முன்னாள் உறுப்பினர் தோழர் எஸ். புஸ்பராஜா, திருகோணமலை நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எஸ். தர்மலிங்கம், மலையக அரசியல் விழிப்புணர்வு கழக பொது செயலாளர் த. சுபாஷ் சந்திரன், மலையக கலை, பண்பாட்டு கழக தலைவர் தோழர் .க.இராஜசேகர், மாணவர் இளைஞர் பொது மன்றம் தலைவர் தோழர் ச. தினேஸ்குமார், தொழிலாளர் தோழர் இரா.நடராஜா, கிராமிய பெருந்தோட்ட சமூக மேம்பாட்டு மையம் பொறுப்பாளர்
இரா .கணேசமூர்த்தி,தொழிற்சங்க பொறுப்பாளர் இரா பற்றிக் ரொசறி, மகளிர் அணிப் பொறுப்பாளர் திருமதி உதயகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு உரையற்றவுள்ளனர்.

கடந்த பல வருடங்களின் பின்னர் இந்த வருட மே தின நிகழ்வை மலையகத்தில் செய்வதற்காக தீர்மானித்து அதன் அடிப்படையில் இந்த மேதின நிகழ்வு இடம்பெறவுள்ளது.