ஹிருணிகாவின் பேச்சு – 2 ……. (தமிழில்)

(Jeevan Prasad)

பெண்களை அடக்குவதற்கு அந்த பெண்ணின் ஒழுக்கத்தை கீழ் தரமாக விமர்சிப்பதால் வீழ்த்த முடியும் . எனது ஒழுக்கத்தை விமர்சித்து என்னை வீழ்த்தப் பார்க்கிறார்கள் . நான் அரசியலுக்கு வந்த காலத்தில் நாமலுடன் உறவு என கதை பரப்பினார்கள். இந்த பாராளுமன்றத்தில் இருக்கும் அநேக ஆண்களோடு என்னை இணைத்து கதை பரப்பினார்கள் . நான் வீழ்ந்தேனா? நாமலிடம் கேளுங்கள் எனக்கும் அவருக்கும் உறவு இருந்ததா என்று …… அவரது காதலிகளின் தூதாக உதவியுள்ளேன் . நாங்கள் நண்பர்கள் . ஒரு நாளாவது அவரோடு உறவு வைத்துக் கொண்டேனா என கேளுங்கள் …… ஒரு பெண் பாராளுமன்றம் வரும் போது இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது . இதற்கெல்லாம் நானா வீழ்வது! எனக்கு பக்க பலமாக முதுகு பலமுள்ள ஒரு ஆம்பிளை – திடமான மனிதர் உள்ளார். இந்த சேறடிப்புகளுக்கு எதிராக நிமிர்ந்து நிற்க அவர் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்.