ஹொங்கொங் தேர்தலில் ஜனநாயக ஆதரவு குழுக்கள் பெரும் வெற்றி

ஹொங்கொங்கில் இடம்பெற்ற மாவட்ட சபை தேர்தல்களில் ஜனநாயக ஆதரவு இயக்கம் எதிர்பாராத பாரிய வெற்றியை பெற்றுள்ளது. ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் வேட்பாளர்கள் இதுவரையில் 278 ஆசனங்களை கைப்பற்றியுள்;ளனர். சீனா சார்பு வேட்பாளர்கள் 42 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர். இந்த தேர்தலில் சீனாசார்பு தரப்பின் முக்கிய வேட்பாளரான யூனிஸ் கோ தோல்வியடைந்துள்ளார்.