10 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மார்க்சிஸ்ட் மீண்டும் போட்டியிட முடிவு

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. மதுரை மக்களவைத் தொகுதியில் மதுரை மேற்கு, கிழக்கு, மத்தி, வடக்கு, தெற்கு, மேலூர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. இதன் மூலம் இத்தொகுதியில் காங்கிஸ் இதுவரை 8 முறை வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், ஜனதா கட்சி ஒருமுறையும் வென்றுள்ளன.